Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மேற்கூரை விழுந்து குழந்தை பலியான வழக்கு…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை….!!

மேற்கூரை இடிந்து விழுந்து குழந்தை பலியான சம்பவம் தொடர்பாக கல்குவாரியில் வெடி வைத்தவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சீலாத்திகுளம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முருகன் வேலைக்கு சென்றுவிட்டார். இதனை அடுத்து சுகன்யா அவரது வீட்டில் மகள் கன்னித்தாய் மற்றும் மகன்  ஆகாஷ் ஆகியோருடன் இருந்தார். அப்போது முருகன் வீட்டில் திடீரென பயங்கர சத்தத்துடன் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இதில் குழந்தை ஆகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து அங்கிருந்தவர்கள் ராதாபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் ஆகாஷின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போது பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் பொதுமக்கள் கூறியதாவது, அப்பகுதியில் உள்ள கல் குவாரிகளில் வெடிவைத்து தகர்க்கும் போது வீடுகளில் அதிர்வு ஏற்படுகிறது. இநிலையில் கல்குவாரியில் வெடி வைத்து தகர்க்கும் போது முருகன் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து ஆகாஷ் பலியாகி உள்ளான்.

எனவே கல் குவாரிகளை மூட வேண்டும் என அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறினர். இதில் காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன்பின் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ராதாபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கல்குவாரியில் பாறைகளை வெடி வைத்து தகர்த்தியவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |