பிரபல நடிகை மீனா தனது பிறந்தநாளை தோழிகளுடன் கொண்டாடியுள்ளார்.
ரஜினி, கமல், அஜீத் என முன்னணி நடிகர்களுடன் நடித்து 80, 90களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் கன்னடம் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார். தொடர்ந்து சில படங்களில் நடித்து வரும் மீனா சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அவரது நெருங்கிய தோழிகளும் பங்கேற்றுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.