வாக்கு எண்ணப்படும் மையங்களை திட்ட இயக்குனர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை ஊராட்சி ஒன்றியத்தில் 171 மலை கிராமங்கள் அமைந்து இருக்கிறது. இதில் 15 ஊராட்சி மன்ற தலைவர்கள், 7 ஒன்றிய கவுன்சிலர் மற்றும் 334 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஒரு மாவட்ட கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கு 91 வாக்குசாவடிகள் மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது.
இதனை அடுத்து வெள்ளிமலை ஏகலைவா உண்டு உறைவிடப் மேல்நிலைப்பள்ளியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் மாவட்ட திட்ட இயக்குனர் மணி நேரில் ஆய்வு செய்துள்ளார். அப்போது வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் எனவும், தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அதிகாரிகளை இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளார்.