2,600 டன் உர மூட்டைகள் சரக்கு ரயில் மூலம் நெல்லை சந்திப்பு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க இருக்கிறது. இதனை ஒட்டி விவசாயிகள் பலர் நெல் சாகுபடி செய்வார்கள். இதற்கு தேவையான உரங்களை கொண்டு வருவதற்காக வேளாண்மைத்துறை அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவனத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் இருந்து சரக்கு ரயில் பெட்டிகளில் உர மூட்டைகள் ஏற்றப்பட்டு நெல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சரக்கு ரயில் காலை நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வந்தடைந்துள்ளது.
அங்குள்ள சரக்கு இறங்குதளத்தில் தொழிலாளர்கள் உர மூட்டைகளை ரயில் பெட்டியிலிருந்து லாரியில் இறக்கின. இந்த உரமூட்டைகள் மொத்தம் 2,600 டன் வந்திருந்தது. இந்நிலையில் வந்தடைந்த உர மூட்டைகள் தூத்துக்குடி, தென்காசி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு உரம் கிடைக்க மேலும் உர மூட்டைகள் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.