ஐஜி அலுவலகம் எதிரில் முதியவர்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள துறைமங்கலம் பகுதியில் உறவினர்களான ராஜ் மற்றும் சிவன் நடராஜன் ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் திருச்சி மாவட்டத்தில் உள்ள மத்திய மண்டல ஐஜி அலுவலக பகுதிக்கு கட்டைபையுடன் வந்துள்ளனர். இதனையடுத்து ஐஜி அலுவலகத்திற்கு எதிர்ப்புறம் இருக்கும் வணிக வளாக பகுதியின் சாலையோரம் நின்று கொண்டு முதியவர்கள் மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர்.
இதனை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் வட்டிக்கு பணம் வாங்கிய விவகாரத்தில் நிலத்தை திருப்பி தராதவர்கள் மீது முதியவர்கள் புகார் அளித்துள்ளனர். ஆனால் 2 ஆண்டுகள் ஆன பிறகும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் தீக்குளிக்க முயன்றதாக முதியவர்கள் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு காவல்துறையினர் இருவரையும் கே.கே நகர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.