Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” அலுவலகத்தை முற்றுகையிட்ட வேட்பாளர்…. நெல்லையில் பரபரப்பு….!!

வேட்பாளர் ஆதரவாளர்களுடன் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வள்ளியூர் யூனியன் திருமலாபுரம் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு கலை சுமிதா, பவானி, இந்திரா, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் குணசேகரனின் மனைவி இந்திரா ஆகிய 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வள்ளியூர் யூனியன் அலுவலகத்தில் நடந்துள்ளது. அப்போது இந்திரா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பவானி மளிகை கடை நடத்தியதற்கான தொழில் வரி செலுத்தவில்லை எனவும், அவரது வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் புகார் அளித்துள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பவானி அவரது ஆதரவாளர்களுடன் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளார். அதில் பவானி தரப்பினர் இந்திரா தன் மீதான குற்ற வழக்குகளை வேட்புமனுவில் தெரிவிக்கவில்லை என்பதால் அவரது வேட்புமனுவையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று முறையிட்டார். இந்நிலையில் இரு தரப்பினரிடமும் உதவி போலீஸ் சூப்பிரண்டு சமய்சிங் மீனா சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு சமய்சிங் மீனா இது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்து தீர்வு காணும் படி அறிவுறுத்தினார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் கலைந்து சென்றனர். இதனைத் தொடர்ந்து பவானியின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |