Categories
அரசியல்

எதிர்க்கட்சித்தலைவர் பொய் பிரச்சாரம் செய்கிறார்…. அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றசாட்டு…!!!

அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பொய் பிரச்சாரம் செய்து வருகிறார் என்று விமர்ச்சித்துள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு , “எடப்பாடி பழனிச்சாமி, திமுக ஆட்சியின் மீது சேற்றை வாரி இருப்பது போல் பேசி இருப்பது மிகவும் கண்டிக்கதக்க ஒன்றாகும். திமுக ஆட்சியானது 202 வாக்குறுதிகளை 130 நாட்களில் நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. 20 சதவீதம் பேருக்கு கடந்த அதிமுக ஆட்சியில் வேலை வாய்ப்பானது வழங்கப்படவில்லை.

திமுகவானது  அதிமுகவின் திட்டங்களை நிறைவேற்றுவதாக பொய்யான தகவல்களை முன்வைத்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அரசானது ஃபோர்டு நிறுவன விவகாரத்தில் உரிய நேரத்தில் நடவடிக்கை மேற்கொள்ளும்” என்று கூறினார்.

Categories

Tech |