தொழிலாளிக்கு தற்கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சுத்தமல்லி பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கும் கோடகநல்லூர் பகுதியில் வசிக்கும் இசக்கி பாண்டி, இசக்கி பாண்டி என்ற கப்ப சிவா என்பவருக்கும் இடையில் கோவில் கொடை விழாவில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சுப்பிரமணி பலவூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த இசக்கி பாண்டி, கப்ப சிவா ஆகிய இருவரும் சுப்பிரமணியை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து சுப்பிரமணி சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இசக்கிபாண்டி, கப்பசிவா ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.