Categories
உலக செய்திகள்

“உங்களால் தான் ஈராக் மக்கள் லட்சக்கணக்கில் உயிரிழந்தார்கள்!”.. ஜார்ஜ் புஷ்ஷிடம் வாக்குவாதம் செய்த நபர்..!!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான, ஜார்ஜ் டபிள்யூ புஸ் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த போது, அமெரிக்க இராணுவ வீரர் அவருடன் வாக்கு வாதம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க நாட்டின் 43வது ஜனாதிபதியாக இருந்த ஜார்ஜ் புஷ், தன் ஆட்சிக் காலத்தில், ஈராக்கில் பேராபத்தை விளைவிக்கக்கூடிய அணு ஆயுதங்கள் இருப்பதாகக்கூறி, தங்கள் படைகளை அந்நாட்டிற்கு போர் தொடுக்க அனுப்பினார். அதன்பின்பு, ஈராக்கில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தால், அப்போது ஆட்சியிலிருந்த சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார்.

அதன் பின்பு அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டது. எனவே, ஈராக் நாட்டில் தீவிரவாத அமைப்பினர்  ஆதிக்கம் செலுத்தினர். எனவே, தீவிரவாத அமைப்புகளை ஒழிப்பதற்காக அமெரிக்கப் படைகள் ஈராக்கில் நிலை நிறுத்தப்பட்டது. ஈராக்கில் பல வருடங்களாக நடந்த மோதலில் மக்கள் லட்சக்கணக்கில் உயிரிழந்தனர்.

இந்நிலையில், ஜார்ஜ் டபிள்யூ புஸ், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஒரு நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டார். அப்போது,  அவரிடம் ஈராக் போரில் ஈடுபட்ட அமெரிக்க ராணுவ வீரரான, மைக் ப்ரைஸ்னர், நீங்கள் சொன்ன பொய்யால் ஈராக்கை சேர்ந்த 10 லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர்.

அதற்கு எப்போது நீங்கள் மன்னிப்புக்கோர போகிறீர்கள்? ஈராக்கில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்கள் இருப்பதாக நீங்கள் பொய் சொல்லியிருக்கிறீர்கள்? ஈராக் ஆபத்து நிறைந்த நாடு என்றும் பொய் சொன்னீர்கள். கடந்த 2003 ஆம் வருடத்தில் என்னை ஈராக் நாட்டிற்கு நீங்கள் அனுப்பினீர்கள்.

அப்போது, உங்களால் தான் என் நண்பர்கள் கொல்லப்பட்டனர். அதற்காக நீங்கள் மன்னிப்பு கோர வேண்டும் என்று கூறினார். அவரைப் பாதுகாப்பு அதிகாரிகள் அங்கிருந்து வெளியேற்றினார்கள்.

Categories

Tech |