Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குற்றங்களை தடுக்க… போலீசார் அதிரடி சோதனை… பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்…!!

காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் குற்றவாளிகளின் வீட்டில் இருந்த பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் அதிகளவில் கொலை, பழிக்குபழி சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் குற்றங்களை தடுக்க காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறையினர் ரவுடிகள், சிறையில் இருந்து வெளியே வந்த குற்றவாளிகள், கொலை செய்துவிட்டு சிறையில் இருக்கும் குற்றவாளிகள், சந்தேகத்தின் பேரில் இருக்கும் நபர்கள், குற்ற வரலாறு பதிவேட்டில் இருப்பவர்கள் ஆகியோரின் தகவல்கள் சேகரித்து பட்டியல் ஒன்றை தாயரித்துள்ளனர்.

இதனையடுத்து ராமநாதபுரம் சூப்பிரண்டு அதிகாரி கார்த்திக்கின் உத்தரவின் படி மாவட்டத்தில் உள்ள துணை சூப்பிரண்டு அதிகாரிகளின் தலைமையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். மேலும் காவல்துறையினர் தயாரித்த பட்டியலில் இருப்பவர்களின் வீட்டில் ஆயுதங்கள் ஏதேனும் உள்ளதா என்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது பலருடைய வீட்டில் கத்தி, அரிவாள், நீண்ட வால் போன்ற பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் ஆயுதங்களை வைத்திருந்தவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பழிக்குபழி சம்பவங்கள் குறைய வாய்ப்பு உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |