தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசித்து முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அனைத்து வகுப்புகளையும் அனுமதிக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் கோரிக்கை விடுத்த போதிலும், பெற்றோர்கள் மத்தியில் இன்னும் அச்சம் விலக வில்லை என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். அதனால் பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும். மேலும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான தேர்வு வயது வரம்பை உயர்த்த பரிசீலனை செய்து வருகிறோம் என்று அவர் கூறியுள்ளார்.