Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK VS RCB : அதிரடி காட்டும் RCB ….! மிரட்டும் விராட் கோலி ….12 ஓவர் முடிவில் 111 ரன் ….!!!

14-வது  ஐபிஎல் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது .ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதில் 29 லீக் போட்டிகள் முடிந்த நிலையில் ,மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் இன்று நடைபெறும் 35 -வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்  அணிகள் மோதுகின்றன .இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி பெங்களூர் அணி முதலில் களமிறங்கியது. இதில் தொடக்க வீரர்களாக கேப்டன் விராட் கோலி – தேவ்தத் படிக்கல் ஜோடி களமிறங்கியுள்ளனர் .

இருவரும் அதிரடியாக விளையாடி வருகின்றன .இதில் கேப்டன் கோலி 39 பந்துகளில் 53 ரன்னும் , படிக்கல் 39 பந்துகளில் 55 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இதனால் பெங்களூர் அணி 12  ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 111 ரன்கள் குவித்துள்ளது.

Categories

Tech |