இந்திய ராணுவத்திற்கு புதிய போக்குவரத்து விமானங்கள் வாங்குவதற்கு டாட்டா நிறுவனத்துடன் மத்திய அரசு கையெழுத்திட்டுள்ளது.
இந்திய அரசு ராணுவத்தை பலப்படுத்தும் நோக்கில் பல்வேறு புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் ராணுவத்திற்கான புதிய போக்குவரத்து விமானங்களை வாங்க ஏர்பஸ் டிஃபன்ஸ் மற்றும் ஸ்பேசஸ் ஆஃ ஸ்பெயின்ஆகிய நிறுவனங்களுடன் ரூபாய் 20 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக செய்தித்தொடர்பாளர் ஏ பாரத் பூஷன் பாபு கூறியுள்ளார்.
இதன் மூலம் விமானப் படையில் உள்ள அவரோ 748 விமானங்களுக்கு மாறாக 5-10 டன் எடையுள்ள 56 சி 295 மீடியம் விமானங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 48 மாதங்களுக்குள் 16 விமானங்கள் பறக்கக் கூடிய நிலையில் இந்நிறுவனங்கள் விமானங்களை ஒப்படைக்க வேண்டும். எஞ்சிய 40 விமானங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் ஏர்பஸ் டிபன் பேஸ் மற்றும் டாட்டா அட்வான்ஸ் சிஸ்டம்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் 10 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன. உள்நாட்டு தயாரிப்பிற்க்கு ஹைதராபாத், பெங்களூர், குஜராத், உத்தரபிரதேசம் ஆகிய இடங்களில் நடத்த இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.