Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK VS RCB : விராட் கோலி , படிக்கல் அதிரடி ஆட்டம் …. CSK அணிக்கு 157 ரன்கள் இலக்கு ….!!!

14 வது ஐபிஎல் சீசன் தொடரில் 35-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது.இதில் தோனி  தலைமையிலான சிஎஸ்கே அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன . ஆனால் ஷார்ஜா மைதானத்தில் ஏற்பட்ட மணல் புயல் வீசியதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது .இதனால் அரை மணி நேரத்திற்குப் பிறகு டாஸ் போடப்பட்டது .இதில் சென்னை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பெங்களூர் அணி முதலில் பேட்டிங் களமிறங்கியது. இதில் தொடக்க வீரர்களாக கேப்டன் விராட் கோலி – தேவ்தத் படிக்கல் ஜோடி களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர் .

இதனால் 10 ஓவரில் ஆர்சிபி அணி விக்கெட் இழப்பின்றி 90 ரன்கள் எடுத்திருந்தது. இதில் கேப்டன் விராட் கோலி 36 பந்திலும், தேவ்தத் படிக்கல் 35 பந்திலும் அரைசதம் கடந்தனர் அப்போது 53 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேப்டன் விராட் கோலி ஆட்டமிழந்தார் .இதன் பிறகு களமிறங்கிய டி வில்லியர்ஸ் 12 ரன்னிலும் , படிக்கல் 70 ரன்னிலும்,மெக்ஸ்வெல் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியாக பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் குவித்துள்ளது. இதில் சென்னை அணி தரப்பில் பிராவோ 3 விக்கெட்டும் ,ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். தற்போது களமிறங்கியுள்ள சென்னை அணி 157 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு விளையாடி வருகிறது.

Categories

Tech |