பெண் காவலர்களின் பணி நேரத்தை குறைத்து மகாராஷ்டிர மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
தற்போது உள்ள காலத்தில் அனைத்து துறைகளிலும் பெண்கள் தடம் பதித்து வருகின்றனர். அந்த வகையில் காவல் துறையில் பெண்களின் பங்கு அளப்பரியதாகும். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் பெண் காவலர்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர். ஆனாலும் காவல் பணிகளில் பணிச் சுமைகள் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாக பெண் காவலர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் .இதனை குறைக்கும் பொருட்டு மகாராஷ்டிர மாநில அரசு ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி பெண் காவலர்களின் பணி நேரமானது 12 மணி நேரத்தில் இருந்து 8 மணி நேரமாக குறைத்து உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே புனே நாக்பூர், அமராவதி, நவி மும்பை போன்ற சில பகுதிகளில் இந்த நடைமுறை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் இந்த முடிவை காவல் துறை இயக்குனர் சஞ்சய் பாண்டே மூத்த அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து அறிவித்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.