Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

குடும்பத்தினரை கட்டி போட்டு….. மிரட்டிய முகமூடி கொள்ளையர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!

முகமூடி கொள்ளையர்கள் வீடுபுகுந்து விவசாயி மற்றும் அவரது குடும்பத்தினரை கட்டிபோட்டு வெள்ளி விளக்கை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுதிள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள படவேடு படால் சாலையில் விவசாயி நாராயணசாமி தன்னுடைய சொந்த நிலத்தில் புதிதாக மாடி வீடு ஒன்று  கட்டி தனது  குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இரவு திடீரென வீட்டின் பின்பக்க கதவினை திறந்துகொண்டு முகமூடி அணிந்த 5 கொள்ளையர்கள் வந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள்  குடும்பத்தினர் அனைவரையும் கட்டிப் போட்டுவிட்டு, கத்திமுனையில் வீட்டில் இருக்கும் அலமாரியில்  நகைகளை தேடியுள்ளனர்.

அங்கு தங்க நகைகள் எதுவும் இல்லாததால் ஏமாற்றமடைந்த கொள்ளையர்கள் வெள்ளி குத்து விளக்கை திருடி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இச்சம்பவம் நிகழ்ந்த போது மழை பெய்து கொண்டு இருந்ததால்  அக்கம்பக்கத்தினருக்கு தெரியப்படுத்த முடியவில்லை. இதுகுறித்து நாராயணசாமி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில்  வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர  விசாரணை மேற்கொண்டு மர்மநபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |