அக்டோபர் மாதம் முதல் 260 தனியார் மதுபான கடைகள் மூடப்பட உள்ளதை தொடர்ந்து தலைநகர் டெல்லியில் மது பானங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
டெல்லியில் புதுப்பிக்கப்பட்ட கலால் கொள்கையின் கீழ் திறந்த ஏலத்தின் மூலம் உரிமம் பெற்ற புதிய மது விற்பனையாளர்கள் நவம்பர் 17ஆம் தேதி முதல் மதுபான கடைகளை திறக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி இதுவரை செயல்பட்டுவந்த 260 தனியார் மதுபான கடைகள் மூடப்படும் நிலை உருவாகியுள்ளது. டெல்லியில், 8-10 வார்டுகளை உள்ளடக்கிய ஒவ்வொரு மண்டலமும் 27 மதுபான கடைகளை கொண்டிருக்கும். இது ஒரு சீர்திருத்த அடிப்படையிலான கொள்கையாக கருதப்படுகிறது.
இதனால் பல இடங்களில் மது பானங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது. தங்களுக்கு பிடித்தமான மதுபானங்கள் தாங்கள் வழக்கமாக வாங்கும் தனியார் மதுபான கடைகளில் கிடைப்பதில்லை என மது பிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால் பெரும்பாலான கடைகளில் சரியான மதுபானங்கள் கிடைப்பதில்லை எனவும், சிலநேரங்களில் மதுபானம் இல்லாமல் திருப்பி செல்லும் சூழ்நிலை உருவாகி உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.