திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சூ. பாலப்பட்டு கிராமத்தில் துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 சொந்த வீடுகள் உள்ளது. இதனை அடுத்து ஒரு வீட்டின் முன்புறத்தில் தன்னுடைய இரு சக்கர வாகனத்தை வாசலில் நிறுத்தி வைத்திருக்கிறார்.
அதன்பின் காலை நேரத்தில் வந்து பார்த்த போது இரு சக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு துரைசாமி அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.