Categories
Uncategorized மாநில செய்திகள்

உடனே செய்யாவிட்டால்…. உரிமம் ரத்து செய்யப்படும்…. அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை…!!!

பத்து ஆண்டுகளுக்கும்  மேலாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யாத சங்கங்கள் உடனே தாக்கல் செய்ய வேண்டும் என்றும், மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ஒரு லாரி டிரைவர் கம்பி ஏற்றிக்கொண்டு வந்தபோது, வணிகத்துறை ஆய்வு செய்யும் போது அந்த வண்டியவே விட்டு ஓடிபோய்ட்டார். அதற்கு 15 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று ஒரு கண்டெய்னரில் வந்த சிமெண்ட் ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது அந்த டிரைவர் ஏதோ ஒரு சாதாரண பில்லை வைத்திருக்கிறார். அவரைக் கேட்டால் மொத்த குடோனிலிருந்து  சப்ளை செய்கிறோம் என்று கூறுகிறார். இப்படி எல்லா வகையிலும் வரிஏய்ப்பு செய்பவர்களை கண்காணித்து கொண்டிருக்கிறோம். மேலும் பத்து ஆண்டுகளுக்கும்  மேலாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யாத சங்கங்கள் உடனே தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும் என்னு கூறியுள்ளார்.

Categories

Tech |