Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இங்க இருக்க கூடாது…. இரு தரப்பினர் மோதல்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

கட்சி கொடிக் கம்பத்தின் பிரச்சினையால் இரு தரப்பினர் மோதலில் சோடா மற்றும் கற்கள் வீசி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகாமையில் கணவாய்ப்பட்டி ஊராட்சி மன்றம் அமைந்திருக்கிறது. இந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தின் அருகாமையில் தி.மு.க, பா.ம.க உள்ளிட்ட கட்சி கொடி கம்பங்களை வைத்திருக்கின்றனர். ஆனால் இதற்கு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இது பற்றி தகவல் அறிந்த காவல்துறை சூப்பிரண்டு சங்கீதா, தாசில்தார் வாசுகி, இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் காவல்துறையினர் விரைந்து அங்கே சென்றுள்ளனர். அப்போது பொதுமக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கலெக்டரிடம் அனுமதி வாங்கிய பிறகு தான் கொடிக்கம்பம் நட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் இரு தரப்பினர் சேர்ந்த அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

இதனையடுத்து நெடுஞ்சாலை துறை சார்பாக அனைத்துக் கட்சி கொடி கம்பங்களையும் ஒரு வாரத்திற்குள் அகற்ற வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும் கட்சிகள் சார்பாக பேருந்து நிறுத்தம் அருகாமையில் கொடிக் கம்பம் அமைக்க முயற்சி செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பொதுமக்களிடமும், கட்சி நிர்வாகிகளிடமும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது திடிரென இரு தரபினரும் கொடி கம்பங்களை தூக்கிக் கொண்டு வேறு இடத்தில் நடுவதற்காக ஓடும் போது காவல்துறையினர் அவர்களை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் கொடி கம்பங்களை நடுவதற்கு முயற்சி செய்த நிலையில் அப்பகுதி பொதுமக்கள் கற்கள் மற்றும் சோடா பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் பெண் காவல்துறையினர் உள்பட 5 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர்களை அதிகாரிகள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதற்குப் பிறகு காவல்துறையினர் இரு தரப்பினரையும் அங்கிருந்து கலைந்து செல்ல உத்தரவிட்ட போது அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் கலைந்து செல்லுமாறு கூறியுள்ளனர். இதற்கு இரு தரப்பினரும் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் காவல்துறையினர் இருதரப்பினரை சேர்ந்த 20 நபர்களை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இருதரப்பினர் மோதல் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |