ஏழை நாடுகளுக்கு 4 கோடியே 50 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்தை இலவசமாக அளிக்க இருப்பதாக இத்தாலி அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் பணக்கார நாடுகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. ஆனால் ஏழை நாடுகளில் இதுவரை 2 சதவீதம் பேருக்கு கூட தடுப்பூசி செலுத்த முடியாத நிலை காணப்படுகிறது. இதை மாற்றும் விதமாக உலக சுகாதார அமைப்பு ஒரு திட்டத்தை செயல்படுத்தியது.
இத்திட்டத்தில் வசதி படைத்த நாடுகள் இணைந்து ஏழை நாடுகளுக்கு இலவசமாக கொரோனா தடுப்பு மருந்துகளை அளித்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஒரு கோடியே 50 லட்சம் டோஸ் தடுப்பு மருந்தை இலவசமாக அளிப்பதாக இத்தாலி அறிவித்திருந்தது. ஆனால் தற்போது முந்தைய அறிவிப்பை விட மூன்று மடங்கு அதிக அளவில் தடுப்பு மருந்தை அளிக்க இத்தாலி முன்வந்துள்ளது.