மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் மத்திய அரசால் தான் பெட்ரோல் டீசல் விலை ஆனது குறையவில்லை என குற்றம்சாட்டி உள்ளார்.
இந்தியாவில் தமிழகம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கேரளா, தெலுங்கனா உள்ளிட்ட பல மாநிலங்களில் பெட்ரோல் விலையானது வரலாறு காணாத அளவில் பல மடங்கு உயர்ந்துள்ளது. இப்பகுதிகளில் ஒரு லிட்டர் பெட்ரோலானது 100 ரூபாய் தாண்டியும், ஒரு லிட்டர் டீசலானது கிட்டத்தட்ட நூறு ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது. 45ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் உத்திரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற பொழுது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது, “ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல் டீசல் விலையை கொண்டுவர மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர் எனவும், மேலும் ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோல், டீசல் விலையை தற்போது கொண்டுவர இயலாது” என்றும் தெரிவித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பாஜகவை சேர்ந்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி செய்தியாளர்களிடம் பேசியதாவது, “ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசல் விலையை கொண்டு வர மாநில அரசுகள் விரும்பாத காரணத்தினால் அதன் விலை குறையவில்லை. மத்திய அரசானது பெட்ரோலின் மீது லிட்டருக்கு 32 ரூபாய் மட்டுமே வரி வசூலிக்கிறது. 19 டாலராக ஒரு கச்சா எண்ணெயின் விலை இருந்தபோதுகூட 32 ரூபாய் தான் வசூலிக்கப்பட்டது. அதன்பின்னர் பீப்பாய்க்கு 72 ஆக மாறிய பின்னரும் கூட அதே ரூபாயை தான் வசூலித்தோம்.
இலவச ரேஷன் பொருட்கள், இலவச வீடு, இலவச சமையல், கியாஸ் இணைப்பு உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் இந்த 32 ரூபாயில் எல்லாம் நாங்கள் வழங்கி வருகிறோம். பெட்ரோல், டீசல் மீது மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் தான் அதிகமாக வரி வசூலித்து வருகிறது” என தெரிவித்தார். ஏற்கனவே நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள், பெட்ரோல், டீசல் விலைகளில் செஸ் வரியை கைவிட்டால் மட்டுமே, தமிழக அரசானது ஜிஎஸ்டி.க்குள் வர விரும்புவதாக தெரிவித்திருந்தார்.