Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காம்பவுண்டு சுவரில் ஏறிய தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பேட்டை பகுதியில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டவுன் பகுதியில் உள்ள உர கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விஸ்வநாதன் தனது வீட்டில் உள்ள முருங்கை மரத்தில் முருங்கைக்காய் பறிப்பதற்காக காம்பவுண்டு சுவர் மீது ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக விஸ்வநாதன் மீது காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்துள்ளது.

இதில் விஸ்வநாதன் பலத்த காயமடைந்தார். இதனைப் பார்த்த அருகில் உள்ளவர்கள் விஸ்வநாதனை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே விஸ்வநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |