குவாட் உச்சி மாநாடு நிறைவடைந்த நிலையில் நாளை நடைபெறவுள்ள ஐ.நா. சபை பொதுக்கூட்டத்திற்காக இந்தியா பிரதமர் நியூயார்க் சென்றுள்ளார்.
குவாட் அன்னும் நாற்கர அமைப்பின் உச்சி மாநாடானது அமெரிக்காவில் நடைபெற்றது. இதில் பங்கேற்குமாறு இந்தியா பிரதமருக்கு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை பிரதமர் மோடியும் ஏற்றுக்கொண்டு அமெரிக்கா சென்றார். இதனை தொடர்ந்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் போன்ற நான்கு நாடுகளும் குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டன.
இந்த உச்சி மாநாடு நேற்று வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் வைத்து நடைபெற்றது. இதில் ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழல், கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் குவாட் அமைப்பை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மேலும் குவாட் கூட்டமைப்பு ஆனது தலைவர்களின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு நிறைவடைந்தது.
இதனை தொடர்ந்து நாளை நியூயார்க்கில் நடைபெற உள்ள ஐ.நா. சபையின் 76வது பொதுக்கூட்டத்தில் இந்தியா பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசவுள்ளார். இதற்காக வாஷிங்டனில் இருந்து அவர் நியூயார்க் விமான நிலையத்திற்கு விமானம் மூலம் சென்று அடைந்துள்ளார். அதிலும் அங்கு அவரை வெளியுறவுத்துறை அதிகாரிகள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.