Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. 11 மாநிலங்களில் புதிய வகை வைரஸ்… மத்திய அரசு கடும் எச்சரிக்கை….!!!!

தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட 11 மாநிலங்களில் செரோடைப் -2 வகை டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவி வருவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. இது வேகமாக பரவுவது மட்டுமல்லாமல் அதிக அளவு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனை தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்துவதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு வைரஸின் புதிய வகை காய்ச்சல் தற்போது புழக்கத்தில் உள்ளது.

இது பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பது மட்டுமல்லாமல் அதிக உயிரிழப்புகலுக்கும் வழி வகுக்கிறது. மேலும் புதிதாக வரும் அறிகுறிகளாக காய்ச்சலோடு ரத்தக்கசிவு உண்டாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தொலைபேசி வழி ஆலோசனைகள் அளிப்பது, பரிசோதனை கருவிகளை அதிக அளவு கையிருப்பு வைத்திருப்பது உள்ளிட்ட ஏற்பாடுகளை மாநிலங்கள் மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

 

Categories

Tech |