தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்து 4 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி முதல்வர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள 505 வாக்குறுதிகளில் இதுவரை 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மூன்று வேளாண் சட்டங்கள், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு வீடியோ மூலமாக முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சொன்னதைச் செய்திருக்கிறோம்! https://t.co/Sk5PwilIvs
— M.K.Stalin (@mkstalin) September 25, 2021