Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று…. கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்…..!!!!

மத்திய வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு ,நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இதன் காரணமாக கடந்த 2 தினங்களாக தமிழகத்தில் சில இடங்களில் கனமழையும், பல இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. இதையடுத்து இன்று  தமிழகம் , புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும்.
மேலும் நீலகிரி, கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல், தேனி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, திருச்சி ஆகிய 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாளை முதல் 28-ந்தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

Categories

Tech |