Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கூட்ட நெரிசலில் ….. செல்போன் , பைக் ….. சிக்கிய தீபாவளி திருடர்கள் …!!

வண்ணாரப்பேட்டையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பொதுமக்களிடம் இருந்து செல்போன், கைப்பை திருடும் கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள ஜவுளிக்கடைகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், பெரம்பூர், வியாசர்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் துணி வாங்குவதற்காக குவிகின்றனர்.அந்த நேரத்தில் பொதுமக்களின் கூட்ட நெரிசலில் அவர்களுடைய நகை பறிப்பு, கைப்பேசி பறிப்பு போன்ற திருட்டுச் சம்பவங்களும் நடக்கின்றன.

Image result for தீபாவளி கூட்ட நெரிசல் கண்காணிப்பு

இதற்காக பழைய வண்ணராப்பேட்டை காவல் துறையினர் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொண்டுவருகின்றனர்.மேலும் கூட்ட நெரிசலில் திருடும் ராயபுரம், கொருக்குப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆனந்த், துரை பாபு, சூரிய, விஜி, அந்தோணி, ரவி, வெங்கடேசன், அருண், உள்ளிட்ட எட்டு பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |