Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

”குலாப்” புயல் வருது….! தமிழகத்த்தில் எச்சரிக்கை….. 1ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம் …!!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்று நாளை மாலை கரையைக் கடக்கிறது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக  உருவாகி வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது புயலாக மாறும் பட்சத்தில் பாகிஸ்தானால் பரிந்துரைக்கப்பட்ட குலாப் பெயர் வைக்கப்பட்டும்.

வடமேற்கு திசை நோக்கி நகரும் புயல் ஆந்திரா – ஒடிசா இடையே நாளை கரையை கடக்கிறது. குலாப் புயல் உருவாக இருப்பதால் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால், நாகை, பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டுள்ளது. சம்மந்தப்பட்ட பகுதி மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

Categories

Tech |