மிகவும் மோசமாக உள்ள சாலையை சீரமைத்து தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள விஜயமங்கலத்தில் இருந்து கோவில்பாளையம் மற்றும் ஆயக்கவுண்டம்பாளையம் செல்லும் வழியில் சாலை மிக மோசமாக இருக்கின்றது. இந்த சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் மக்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமம் அடைகின்றனர். இதனால் அங்கு அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.