80களின் முன்னணி நடிகை 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரைத்துறைக்கு ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.
மைதிலி என்னை காதலி எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அமலா. இதை தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வந்த அவர் திருமணம் செய்துகொண்டு கணவர், குழந்தைகள் என செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் 20 வருடங்களுக்குப் பிறகு பிரபல நடிகை அமலா மீண்டும் திரைத்துறைக்கு ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.
அதன்படி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஷர்வானந்த் நடிக்கும் கணம் என பெயரிடப்பட்டுள்ள படத்தில் தான் நடிகை அமலா நடிக்க இருக்கிறார்.