போலீஸ் சி.ஐ.டி. என்று கூறி பணம் கேட்டு மிரட்டியவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள டவுன் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பாக்யராஜ் பணிபுரிந்து வருகிறார். இவர் ராஜகோபால் பூங்கா அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது பாக்யராஜை வழிமறித்த ஒரு நபர் நான் போலீஸ் சி.ஐ.டி. என்று கூறி அவரிடம் 200 ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் பாக்யராஜ் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மற்றொரு காவல் அதிகாரி உதவியுடன் அந்த நபரை மடக்கிப் பிடித்து டவுன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில்அவர் மருதிபட்டியை சேர்ந்த தம்பித்துரை என காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தம்பிதுரையை கைது செய்தனர்.