Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நடைபயிற்சிக்கு சென்ற பெண்…. மர்ம நபர் செய்த செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

பெண்ணின் தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துரையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். 

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஜெய் நகர் பகுதியில் வளர்மதி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் நடைபயிற்சி சென்ற போது வந்த மர்ம நபர் ஒருவர் வளர்மதி அணிந்திருந்த 12 பவுன் தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார். இதனால் பதறிய வளர்மதி தங்க சங்கிலியை இருக்கமாக பிடித்துக் கொண்டுள்ளார். இருப்பினும் அந்த மர்ம நபர் வளர்மதியின் தங்க நகையில் முக்கால் பகுதியை பறித்துக்கொண்டு தப்பித்து சென்றார்.

இதுகுறித்து வளர்மதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் அந்த மர்ம ஆசாமியின் உருவம் பதிவாகி உள்ளதா என ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |