தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசித்து முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறந்த உடன் மதிய உணவு திட்டத்தை தொடங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுத்த சில வாரங்களில் 8 ஆம் வகுப்புவரை பள்ளிகள் திறக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து பள்ளிகள் திறந்த உடன் உடனடியாக மதிய உணவு திட்டத்தை துவங்க வேண்டும் என கூறியுள்ளது.