மராட்டிய மாநிலத்தில் வழிபாட்டுத்தலங்களை திறக்க முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.
மும்பையில் கொரானா பரவலை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டன. இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டன. ஆனால் இரண்டாம் அலையின் பரவல் காரணமாக மீண்டும் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டது. இதற்கிடையே மாநிலத்தில் கோயில்களை திறக்க வேண்டுமென பாஜககார்கள் போராட்டம் நடத்தினர் . மேலும் கோயில்களை திறக்க வேண்டுமென கவர்னர் பகத்சிங் கோஷயாரி முதலமைச்சர் உத்தவ் தாக்கரவிற்க்கு கடிதம் எழுதியிருந்தார். இதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் 7ஆம் தேதி முதல் மாநிலத்தில் வழிபாட்டு தளங்களை திறக்க முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் கூறியதாவது:- மராட்டிய மாநிலத்தில் அடுத்த மாதம் 7ஆம் தேதி முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட உள்ளன. அரசு மூன்றாவது அலைக்கு தயாராகி உள்ளது. ஆனால் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்ககளுடன் பல்வேறு தளர்வுகளை மாநில அரசு அறிவித்து வருகிறது. எல்லோரும் கவனமாக வழிபாட்டு தலங்களுக்கு செல்லும்போது முக கவசம் அணிந்து, சனிடைசர்களை பயன்படுத்த வேண்டும். வழிபாட்டுத்தலங்களில் தடுப்பு நடவடிக்கைகளை அமல்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.