Categories
சினிமா தமிழ் சினிமா

அஸ்வின் ஹீரோவாக நடிக்கும் ‘என்ன சொல்ல போகிறாய்’… வெளியான முக்கிய அப்டேட்…!!!

அஸ்வின் ஹீரோவாக நடிக்கும் என்ன சொல்ல போகிறாய் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது .

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அஸ்வின். இவர் ஓகே கண்மணி, எனை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட படங்களில் துணை நடிகராக நடித்திருந்தார். தற்போது இவர் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்‌. ரொமான்டிக் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் அவந்திகா, தேஜு அஸ்வினி இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் குக் வித் கோமாளி பிரபலம் புகழ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் .

https://twitter.com/MervinJSolomon/status/1441393643651153923

டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு விவேக் மற்றும் மெர்வின் இசையமைக்கின்றனர். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் என்ன சொல்ல போகிறாய் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தின் இசை மற்றும் பாடல்களின் உரிமைகளை மியூசிக் 247 நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த படத்தின் அடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‌

Categories

Tech |