தட்டுப்பாட்டுப் பிரச்சனைகளைத் தீர்க்க 5000 தற்காலிக விசாக்களுக்கு பிரதமர் அனுமதியளித்துள்ளார்.
பிரித்தானிய நாட்டில் உள்ள பல பகுதிகளின் பெட்ரோல் நிலையங்களில் எரிபொருளுக்காக காத்திருக்கும் வாகனங்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிரித்தானிய அரசு எரிபொருள் பிரச்சினைக் குறித்து பதற்றம் வேண்டாம் எனவும் அது விரைவில் சரிசெய்யப்படும் எனவும் மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளது. ஆனாலும் மக்கள் இந்த தட்டுபாட்டு நிலையால் பொருளாதாரச்சரிவு ஏற்படுமோ? என்ற பயத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. அதோடு போக்குவரத்து நெரிசலுக்கு கனரக வாகனங்களை ஓட்டுவதற்கு ஆளில்லாததும், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதும் காரணமாகக் கூறப்படுகிறது.
அதோடு அந்நாட்டு கடல் பகுதியில் பிரான்சை மீன் பிடிக்க கூடாது என எச்சரித்ததால் ஐரோப்பிய ஒன்றியங்கள் இங்கிருந்து மீன் வாங்க மாட்டோம் என அறிவித்துள்ளதும் காரணம் என தெரியவந்துள்ளது. இதனால் பிரான்ஸ் நாட்டிலுள்ள கலாயிஸ் துறைமுகம் வழியே பிரித்தானிய நாட்டிற்கு வந்துச்செல்வதில் ஏற்பட்ட பிரச்சனையால் சுமார் 1 லட்சம் கனரகவாகன ஓட்டுனர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வேலையை விட்டு சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கனரக வாகனங்களை இயக்க ஆளில்லாததால் சாப்பாடு முதல் எரிபொருள் வரை எல்லாவற்றிற்கும் குடிமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடந்த 1973, 1978 மற்றும் 2000-களில் நடைபெற்ற வாகன ஓட்டுனர்கள் வேலைநிறுத்தத்தால் பிரித்தானியாவில் எரிபொருள் தட்டுப்பாடு, அதன் விலையேற்றம் மற்றும் ரேஷன் முறை வழங்கல் ஆகிய நிகழ்வுகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் சுமார் 5000 அயல்நாட்டு ஓட்டுனர்களுக்கு தற்காலிக விசா வழங்கி பிரச்சனையை தீர்க்க திட்டமிட்டுள்ளார். அதே சமயத்தில் மீதமுள்ள தட்டுபாட்டை ராணுவவீரர்களைக் கொண்டு சரிசெய்யவும் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனால் திட்ட நடைமுறைக்கு முன் பிரித்தானியாவில் பல பிரச்சனைகள் உருவாகி சிக்கலானநிலை ஏற்பட்டுள்ளது.