Categories
உலக செய்திகள்

‘உயிருக்கு போராடும் பாட்டி’…. தந்தை எதிராக வழக்கு தொடர்ந்த சிறுவன்…. நீதிபதி அளித்த அதிரடி தீர்ப்பு….!!

தந்தை மறுப்பு தெரிவித்ததற்கு எதிராக  நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த சிறுவனுக்கு வெற்றி கிடைத்துள்ளது.

உலக நாடுகளில் உள்ள சுகாதார வல்லுனர்கள் மற்றும் மருத்துவர்கள் கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசியை செலுத்தி கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். அதிலும்  12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு இன்னும் அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில் நெதர்லாந்தில் Groningen பகுதியில் உள்ள 12 வயது சிறுவன் தனக்கு கொரோனா தொற்று தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதற்காக நீதிமன்றம் வரை சென்றுள்ளான். அதாவது நெதர்லாந்தில் 12 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

இருப்பினும் அவர்கள் தங்களின் பெற்றோரிடம் அனுமதி பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் தானும் தடுப்பூசி செலுத்திக் கொள்வேன் என்று கூறியுள்ளான். ஆனால் அவரின் தந்தை ஒப்புதல் அளிக்கவில்லை. மேலும் அவன் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென்பதற்கு காரணம் ஒன்று உள்ளது. அது “சிறுவனின் பாட்டி மெட்டாஸ்டேடிக் நுரையீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார். மேலும் அவர் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் இறக்கலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனால் தனது பாட்டியை முடிந்தவரை கவனித்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக மருத்துவமனை சென்றுள்ளான். ஆனால் அங்குள்ள மருத்துவமனை அதிகாரிகள் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளனர். இதனையடுத்து சிறுவன் தனது பாட்டியை பார்த்துக் கொள்வதற்காக தடுப்பூசி செலுத்த வேண்டும்” என்று விரும்பியுள்ளான். ஆனால் இதற்கு தந்தை மறுப்பு தெரிவித்துள்ளார். ஏனெனில் கொரோனா தொற்றுக்கு எதிராக குழந்தைகளுக்கு செலுத்தப்படும் தடுப்பூசி குறித்த ஆய்வுகள் இன்னும் முழுமையடையவில்லை.

மேலும் இவ்வாறு தடுப்பூசி செலுத்திக் கொண்டால் இனப்பெருக்க உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து  தடுப்பூசி செலுத்திக் கொண்டால் அது தொடர்ச்சியான கொரோனா தொற்று அறிகுறிகளை உண்டாக்கும் என்பதால் மறுத்துள்ளார். இருப்பினும் இந்த முடிவிற்கு அவனது தாயார் அனுமதி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இங்கிலாந்தில் 12 முதல் 17 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.

இதனால் தானும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து தனது தந்தையின் முடிவை எதிர்த்து சிறுவன் வழக்கு தொடுத்துள்ளான். இந்த வழக்கை Groningen மாவட்ட நீதிமன்ற நீதிபதி பார்ட் ட்ராம்ப் விசாரித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதில் “சிறுவனின் எண்ணமானது மிகவும் அப்பழுக்கற்றது. அதிலும் சிறுவனின் தந்தையின் தயக்கத்தை காட்டிலும் முக்கியமானது என்பதால் அவர் விருப்பப்படியே தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம்” என்று தீர்ப்பளித்துள்ளார். மேலும் சிறுவனின் தந்தை கொரோனா தடுப்பூசி குறித்து பேசிய வாதத்திற்கு  எந்தவொரு அறிவியல் அடிப்படையிலான ஆதாரம் இல்லை என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |