இனி நடைபெறும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் அனைத்திலும் முதல் தேர்வாக தமிழ் பாட தாள் இடம்பெறும் வகையில் திருத்தம் செய்துள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். தமிழ் பாட தாளில் குறைந்தபட்சம் 45 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றால் மட்டுமே பிற தாள்களை மதிப்பீடு செய்யும் வகையில் தேர்வு நடைமுறையில் மாற்றம் செய்துள்ளது. மேலும் குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பாணையை அடுத்த மாதம் வெளியிட முடிவு செய்துள்ளது டிஎன்பிஎஸ்சி.
Categories