உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்,வீராங்கனைகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.இதில் ‘ரீகர்வ்’ மகளிர் தனிநபர் பிரிவுக்கான காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் அங்கிதா பகத் 6-4 என்ற கணக்கில் தென்கொரியாவை சேர்ந்த காங் சாய் யங்கை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
இதையடுத்து ‘காம்பவுண்ட்’ஆடவர் தனிநபர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த அபிஷேக் வர்மா 145-142 என்ற புள்ளி கணக்கில் சுலோவக்கியாவை சேர்ந்த ஜோசப் போசான்ஸ்கியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். அதேபோல் மகளிர் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா 146-142 என்ற புள்ளி கணக்கில் தென்கொரியாவை சேர்ந்த வீழ்த்தி சாவோன் சோவை காலிறுதிக்கு முன்னேறினார்.