செல்போன் திருட முயன்ற நபரை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கணபதி பகுதியில் கணேஷ் ராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது இரு சக்கர வாகனத்தை காந்திபுரம் டவுன் பேருந்து நிலையம் அருகில் நிறுத்தி விட்டு அங்கிருக்கும் கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் கவரில் இருந்த அவரது செல்போனை வாலிபர் ஒருவர் திருடிவிட்டு தப்பி ஓட முயற்சி செய்துள்ளார்.
இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த கணேஷ் அக்கம்பக்கத்தினர் உதவியோடு அந்த வாலிபரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டார். அதன் பிறகு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் செல்போன் திருட முயன்ற நபர் ஜமீலா என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் அந்த வாலிபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.