Categories
மாநில செய்திகள்

மக்களே ரெடியா?…. தமிழகம் முழுவதும் நாளை…. 3வது மெகா தடுப்பூசி முகாம்…..!!!!

தமிழகத்தில், நாளை நடக்கவிருக்கும் மெகா தடுப்பூசி முகாமை மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. தமிழகம் முழுவதும் நாளை 3வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற இருப்பதால் அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையுள்ள தடுப்பூசிகள் தமிழக அரசு தரப்பில் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இதை பற்றி வெளியிட்டுள்ள செய்தியில் தமிழக முதல்வர் அறிவுறுத்தலின்படி, கடந்த செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் மிகப்பெரிய தடுப்பூசி முகாம் 20 லட்சம் தடுப்பூசிகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அந்த இலக்கை விட கூடுதலாக 28 லட்சத்து 91 ஆயிரத்து 21 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் இரண்டாவது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி 15 லட்சம் பேருக்கு இலக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதனை விட கூடுதலாக 16 லட்சத்து 43 ஆயிரத்து 879 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதனை தொடர்ந்து மூன்றாவது மாபெரும் தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் நாளை நடக்க இருக்கிறது.

அதில் 20 ஆயிரம் தடுப்பூசி முகாம்களின் மூலம் 15 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. நாளை நடைபெற இருக்கும் மூன்றாவது தடுப்பூசி முகாமை மக்கள் அனைவரும் பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொண்டு கொரோனா தொற்று ஒழிக்கும் வகையில் தங்கள் பங்களிப்பை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டன.

இந்த நிலையில் நாளை சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் மீண்டும் ஆயிரத்து 600 மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற இருக்கிறது.சென்னையில் சிறப்பு முகாம்கள் அமைந்துள்ள இடங்களை பொதுமக்கள் http:// chennaicorporation.gov.in/gcc/covid&details/megavacdet.jsp-மாநகராட்சியின் இணையதள இணைப்பின் மூலமாகவும்,044-25384520, 044-46122300, தொலைபேசியின் எண்களின் மூலமாகவும், தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.

Categories

Tech |