Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

செந்துறை பத்திரப்பதிவு அலுவலகம்… லஞ்ச ஒழிப்பு போலீசார் நள்ளிரவு வரை சோதனை….!!!!!

அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் தாலுகா அலுவலகம் அருகே பத்திரப்பதிவு அலுவலகம் இயங்கி வருகிறது. அந்த அலுவலகத்தில் துணைப் பதிவாளராக ஸ்ரீராம் என்பவர் பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் இங்கு பணி மாறுதலாகி வந்துள்ளார். கொரோனோ தொற்று காரணமாக கடந்த ஒரு வருடமாக பத்திரப்பதிவு குறைந்த அளவில் நடைபெறுகிறது.

அதனால் இந்த அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்வதற்கு சமீப காலமாக அதிக அளவில் லஞ்சம் பெறப்படுவதாக பொதுமக்களிடமிருந்து லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு பல்வேறு தரப்பில் இருந்து புகார்கள் வந்துள்ளன. அந்தப் புகாரின் பேரில் நேற்று திடீரென அரியலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் சந்திரசேகர், இன்ஸ்பெக்டர் வானதி தலைமையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதிரடியாக அலுவலகத்திற்குள் நுழைந்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

நேற்று காலை முதல் மாலை வரை நடைபெற்ற பத்திரப்பதிவு நடவடிக்கைகளில் அனைத்து விபரம் மற்றும் அதற்காக பெறப்பட்ட கட்டணம் போன்றவற்றைக் குறித்து வெகுநேரமாக விசாரணைகள் நடத்தப்பட்டன. மேலும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் அங்கேயே தங்க வைக்கப்பட்டனர். அதனைத்தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டன. அதில் முக்கியமான தகவல்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் குறித்துக் கொண்டனர்.

அதன்பின் சார்பதிவாளர் ஸ்ரீராமை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தங்களது அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். நேற்று நள்ளிரவு வரை நீடித்த இந்த திடீர் அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூபாய் 38 ஆயிரம் லஞ்சப்பணம் சிக்கியது . அதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றன. பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டதால் அந்த பகுதி அரசு ஊழியர்களிடையே பயத்தை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |