சேதமடைந்து காணப்படும் மண் சாலையை அதிகாரிகள் சீரமைத்து தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பாலாஜி கார்டன் என்ற பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கின்றது. இந்த பகுதிக்கு செல்வதற்கு அங்குள்ள தனியார் பள்ளியை ஒட்டி ஒரு மண் சாலை உள்ளது. இந்த மண் சாலையில் உள்ள கற்கள் பெயர்ந்து மிகவும் சேதமடைந்து காணப்படுவதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆகவே சேதமடைந்து காணப்படும் மண் சாலையை தார் ரோடாக மாற்றித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.