இலை குவியலுக்கு அடியில் சடலமாக கிடந்த பள்ளி ஆசிரியை கொலை செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
லண்டனில் ஒரு பள்ளியில் சபீனா நெஸ்ஸா என்ற 28 வயது இளம்பெண் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரின் வீடு தெற்கு லண்டனில் உள்ள கிட்ப்ரூக் பக்கத்தில் அமைந்துள்ளது. இந்த நிலையில் வீட்டின் அருகில் இருந்த பப்பில் சபீனா அவரது நண்பரை சந்திக்க சென்றுள்ளார். அப்பொழுது அதன் அருகில் உள்ள கேடர் பூங்காவில் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனை பூங்காவிற்கு செல்லும் மக்கள் சபீனாவின் அடையாளத்தை கண்டுபிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் அவரது சடலமானது இலைகளின் குவியலுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது பிரித்தானியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள சமயத்தில் அதிர்ச்சியையும் மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் சபீனாவிற்கு மக்கள் அஞ்சலி செலுத்தி வரும் வேளையில் கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணையின் படி விடுவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சபீனா படுகொலை செய்யப்பட்ட இடத்திற்கு அருகில் இருந்த சிசிடிவி கேமராவை போலீசார் கைப்பற்றி அதிலிருந்த ஆதாரத்தை அடிப்படையாக வைத்து மூன்றாவது நபரை தேடி வருகின்றனர். மேலும் அவரின் அடையாளங்களையும் வெளியிட்டுள்ளார். ஏனெனில் அவரின் அடையாளம் மற்றும் இருப்பிடம் பற்றிய தகவல்கள் கிடைக்குமானால் விசாரணைக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும் என்று மெட் இன் ஸ்பெஷலிஸ்ட் கிரைம் கமாண்டிலிருந்து துப்பறியும் தலைமை நிபுணரான நீல் ஜான் தெரிவித்துள்ளார்.
அந்த 12 வினாடிகள் கொண்ட பதிவில் , ஒரு வழுக்கை தலையுடைய நபர் கருப்பு நிற ஹூடி கோட் மற்றும் சாம்பல் நிறத்தில் ஜீன்ஸ் அணிந்துள்ளார். அவரின் கையில் ஆரஞ்சு நிற பொருளை பிடித்துக் கொண்டு செல்லும் போது அங்கு பொருத்தப்பட்டுள்ள கேமராவை கண்டதும் தலையை குனிந்தும் முகத்தை மறைத்தும் சென்றுள்ளார். இந்த படுகொலை தொடர்பாக அங்கிருந்த ஒரு சில்வர் நிற காரையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். குறிப்பாக கேமாராவில் பதிவான அந்த நபருக்கு இச்சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகித்துள்ளனர். அதிலும் அந்த நபர் குறித்து ஏதேனும் தகவல் அறிந்தவர்கள் உடனே காவல் துறையை அணுகுமாறு பெருநகர காவல்துறை உதவி ஆணையரான லூயிசா ரோல்ஃப் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.