Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பப்பாளியில் இவ்வளவு லாபமா…..? வெளி மாநிலத்திற்கு ஏற்றுமதி…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

அதிக லாபத்தை தரும் பப்பாளி மரங்களை விவசாயிகள் ஆர்வத்துடன் வளர்க்கின்றனர்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள குடிமங்கலம் பகுதியில் விவசாயிகள் அதிகமாக தென்னை மரங்களை நட்டு சாகுபடி செய்து வருகின்றனர். ஆனால் இதில் சரியான லாபம் கிடைக்காததால் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் பப்பாளி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சாகுபடிக்காக நல்ல சிவப்பு நிறமும் சுவையும் கொண்ட ரெட் லேடி ரக பப்பாளிக் கன்றுகளைப் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் சாகுபடி செய்யப்படும் ரெட் லேடி ரகப் பப்பாளிகள் கேரள மாநிலத்திற்கு விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதுகுறித்து விவசாயிகளிடம் கேட்டபோது அவர்கள் இந்த ரக பப்பாளி மரங்களின் வயது 22 மாதங்கள் எனவும், சொட்டு நீர் பாசன முறை சாகுபடிக்கு ஏற்றது எனவும் கூறியுள்ளனர்.

இதனையடுத்து 7 அடிக்கு 7 அடி என்ற கணக்கில் பப்பாளிக் கன்றுகளை நடவு செய்து 8 மாதங்களில் அறுவடை செய்துவிடலாம் என்றும், சொட்டு நீர் பாசன முறை பின்பற்றப்படுவதால் தண்ணீர் பிரச்சனை வெகுவாக இல்லை என்றும், பப்பாளி மரங்களின் வேர் பகுதிகளில் நீர்த்தேக்கம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இதற்கான கூலி மற்றும் அறுவடைச் செலவுகள் குறைவாக இருப்பதால் அதிக வருமானம் பெறலாம் என்பதையும் கூறி மகிழ்ந்துள்ளனர்.

Categories

Tech |