கோவை அருகே உள்ள சரவணம்பட்டி கீரணத்தம் பகுதியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் இளம் பெண் ஒருவர் ஊழியராகப் பணியாற்றிவந்தார். அதே நிறுவனத்தில், திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தைச் சேர்ந்த ரஞ்சித்(24) என்பவரும் பணியாற்றி வந்துள்ளார்.
ரஞ்சித் அந்த இளம் பெண்ணை காதலிப்பதாகக் கூறியுள்ளார். அந்தப்பெண் காதலை ஏற்க மறுத்து அவரை கண்டித்துள்ளார். இந்தச் சூழ்நிலையில் கடந்த 20ஆம் தேதி சரவணம்பட்டி ரமணீஸ் மூன்றாவது வீதி அருகே அந்த இளம்பெண் வந்துகொண்டிருந்தபோது, ரஞ்சித் அப்பெண்ணை வழிமறித்து தன்னை காதலிக்குமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரைத் தாக்கியுள்ளார்.
இது தொடர்பாக அந்த பெண் சரவணம்பட்டி காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், ரஞ்சித் மீது கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், தகாத வார்த்தையில் திட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்த காவலர்கள் அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.