Categories
தேசிய செய்திகள்

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு முடிவு…. மும்பை என்ஜினியர் சுபம்குமார் முதலிடம்…!!!!

2020 ஆம் ஆண்டுக்கான ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவு வெளியாகியுள்ளது. இதில் சுமார் 761 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

2020 ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு கடந்த ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வை நாடு முழுவதுமிலிருந்து 4 லட்சத்து 82 ஆயிரத்து 870 பேர் எழுதினர். இந்நிலையில் இத்தேர்வுக்கான முடிவை யுபிஎஸ்சி நேற்று அறிவித்துள்ளது. அதன்படி மொத்தம் 761 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் . இதில் 545 ஆண்களும் 216 பெண்களும் ஆவர். இந்த தேர்வில் முதலிடம் பிடித்தவர் மும்பை ஐஐடியில் இளநிலை சிவில் இன்ஜினியரிங் பட்டம் பெற்ற சுபம்குமார் ஆவார். பெண்களில் ஜாக்ரதி அஸ்வதி முதல் இடத்தை பிடித்துள்ளார். இவர் மத்திய பிரதேச மாநிலம் மவுலானா ஆசாத் தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் பி.டெக் பட்டம் பெற்றவராவார்.

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற 767 பேரில் 25 பேர் மாற்றுத்திறனாளிகள் ஆவார் . இவர்களில் 86பேர் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவையும், 220 பேரை ஓபிசி பிரிவையும், 122 பேரில் 60 பேர் எஸ்டி பிரிவையும் சேர்ந்தவர்களாவர். மேலும் 150 பேர் ரிசர்வ் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கான தேர்வு முடிவுகள் யுபிஎஸ்சி அதிகார இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும், முடிவு வெளியிட்ட 15 நாட்களுக்குள் மதிப்பெண்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் எனவும் யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.

Categories

Tech |