ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் இடிமுழக்கம் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். தற்போது இவர் ஐங்கரன், அடங்காதே, இடிமுழக்கம், 4G, ஜெயில் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் இடிமுழக்கம் படத்தை பிரபல இயக்குனர் சீனுராமசாமி இயக்கியுள்ளார். இந்த படத்தில் காயத்ரி கதாநாயகியாக நடித்துள்ளார். ஸ்கைமேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்திற்கு கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார்.
. @Skymanfilms ‘s @Kalaimagan20 தயாரிப்பில் @seenuramasamy இயக்கத்தில் வெற்றித்தழிழன் @gvprakash நடிக்கும் #IdiMuzhakkam திரைப்படத்தின் டப்பிங் 🎙 இன்று முதல் தொடங்குகிறது…@SGayathrie @soundar4uall @Vairamuthu @manobalam @NRRaghunanthan @DoneChannel1 @CtcMediaboy pic.twitter.com/1T7dxyjSET
— SKYMAN FILMS INTERNATIONAL (@SkymanFilms) September 25, 2021
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இடிமுழக்கம் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.