Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மொத்தம் 2,648 பதவிகள்…. மனுக்கள் தள்ளுபடி…. தீவிரமாக நடைபெற்ற பணி….!!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனுவை தாக்கல் செய்ததில் 79 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் 7,651 நபர்கள் வேட்பு மனுவை தாக்கல்ச் செய்துள்ளனர். தற்போது வேட்புமனு பரிசீலனை செய்யப்பட்டதில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட தாக்கல் செய்யப்பட்டுள்ள 682 மனுக்களில் 11 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட தாக்கல் செய்யப்பட்டிருந்த 95 மனுக்களில் 7 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  எனவே மொத்தமாக இம்மாவட்டத்தில் 7, 651 மனுக்களில் 79 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் 7, 572 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

Categories

Tech |